ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 16ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பெங்கால் முதல் இன்னிங்சில் 174 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா, முதல் இன்னிங்சில் 404 ரன் குவித்தது.
இதைத் தொடர்ந்து, 230 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய பெங்கால் அணி 241 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
12 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா 2.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 14 ரன் எடுத்து வென்று 2வது முறையாக ரஞ்சி கோப்பையை முத்தமிட்டது. உனத்கட் ஆட்ட நாயகன் விருதும், இந்த தொடரில் மொத்தம் 907 ரன் குவித்த அர்பித் வாசவதா தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
0 Comments