நாட்டில் டிசம்பர் 2022-ல் சுரங்க மற்றும் குவாரித் துறை உற்பத்தி, 2021 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 9.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், 2022-23ம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, காலகட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 5.4 சதவீதம் அதிகரித்து உள்ளது.
2021 டிசம்பரை விட 2022 டிசம்பரில் உற்பத்தி அதிகரித்த முக்கியமான தாதுக்கள் மற்றும் அதிகரித்த சதவீதம்: தங்கம் (64.2%), பாஸ்போரைட் (53.9%), இரும்புத் தாது (19.5%), சுண்ணாம்பு (14.5), மாங்கனீஸ் தாது (12.8%), நிலக்கரி (11.4%), செறிவூட்டப்பட்ட துத்தநாகம் (9.4%), செறிவூட்டப்பட்ட லீட் (4.5%), செறிவூட்டப்பட்ட காப்பர் (3.9%), மற்றும் இயற்கை எரிவாயு (2.6%).
0 Comments