Recent Post

6/recent/ticker-posts

ஏப்ரல் 2022 – ஜனவரி 2023 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 16% அதிகரித்து 698.25மில்லியன் டன்னை எட்டியுள்ளது / COAL PRODUCTION FROM APRIL 2022 TO JANUARY 2023

  • உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019-20-ஆம் நிதியாண்டில் 730.87 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி, 2021-22-ஆம் ஆண்டில் 778.19 மில்லியன் டன்னாக அதிகரித்தது. 
  • இந்த நிதியாண்டிலும் நிலக்கரி உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 2022 – ஜனவரி 2023 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 698.25 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. 
  • இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 16% அதிகமாகும். 2021-22ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 601.97 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. 
  • இந்த காலகட்டத்தில் கோல் இந்தியா நிறுவனத்தின் சொந்த உற்பத்தி 478.12 மில்லியன் டன்னிலிருந்து 550.93 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. 
  • இது 15.23% அதிகமாகும். கூடுதல் மின் நுகர்வால் ஏற்படும் நிலக்கரித் தேவையை சமாளிக்க இந்த உற்பத்தி உயர்வு உதவிகரமாக அமைந்துள்ளது.
  • 2025-ஆம் நிதியாண்டில் 1.31 பில்லியன் டன்னாகவும், 2030-ஆம் நிதியாண்டின் 1.5 பில்லியன் டன்னாகவும் நிலக்கரி உற்பத்தியை உயர்த்த நிலக்கரி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. 
  • நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நிலக்கரி அமைச்சகம் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக வணிக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel