TAMIL
- இந்தியா எரிசக்தி வாரம் 2023 / INDIA ENERGY WEEK 2023: பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரம் 2023-ஐ பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து உருவாக்கப்பட்ட இந்திய எண்ணெய் நிறுவனத்தின் சீருடைகளையும் பிரதமர் வெளியிட்டார்.
- இந்திய எண்ணெய் கழகத்தின் உட்புற சூரிய எரிசக்தி சமையல் முறையின் இரட்டை அடுப்பு மாதிரியையும் நாட்டுக்கு அர்ப்பணித்த அவர் இதன் வணிக ரீதியான விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
- எத்தனால் கலக்கும் திட்டத்தின் கீழ் 11 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 84 சில்லறை விற்பனை பெட்ரோல் நிலையங்களில் இ-20 எரிபொருளையும் பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார். பசுமை எரிசக்தி ஆதாரங்கள் மூலம் இயங்கும் வாகனங்களுடன் பசுமைப் போக்குவரத்து பேரணியை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இது பசுமை எரிபொருள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்.
- இந்த நிகழ்வில் கர்நாடக ஆளுநர் திரு.தாவர் சந்த் கெலாட், கர்நாடக முதலமைச்சர் திரு.பசவராஜ் பொம்மை, மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை இணை அமைச்சர் திரு.ராமேஸ்வர் தெலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- எரிசக்தி மாற்றத்தில் இந்தியாவின் அதிகரித்து வரும் சக்தியை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் பிப்ரவரி,6 முதல் 8 வரை இந்தியா எரிசக்தி வாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- எரிசக்தி பரிமாற்றத்திற்கு பொறுப்பான நாட்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி விவாதிக்க மரபு சார்ந்த மற்றும் மரபு சாராத எரிசக்தி தொழில் துறையில், அரசுகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைவர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைத்துக் கொண்டு வரும்.
- உலகம் முழுவதிலுமிருந்து 30க்கும் அதிகமான அமைச்சர்கள் இதில் கலந்து கொள்வார்கள். இந்திய எரிசக்தியின் எதிர்காலம் பற்றிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து, 500 உரையாளர்களும், 1000 கண்காட்சி ஏற்பாட்டாளர்களும், 30,000 பிரதிநிதிகளும் விவாதிப்பார்கள்.
- Prime Minister Mr. Narendra Modi inaugurated the India Energy Week 2023 in Bengaluru today. The Prime Minister also unveiled Indian Oil Company uniforms made from used plastic bottles.
- He dedicated the Indian Oil Corporation's indoor solar energy cooking system's double-stove model to the country and launched its commercial sale.
- The Prime Minister also introduced E-20 fuel at 84 retail petrol stations in 11 states/UTs under the Ethanol Blending Scheme. He flagged off the Green Transport Rally with vehicles powered by green energy sources. This will help create awareness among the public about green fuel.
- The event was attended by Karnataka Governor Mr. Dawar Chand Khelat, Karnataka Chief Minister Mr. Basavaraj Bummy, Union Petroleum and Gas Minister Mr. Hardeep Singh Puri, Union Petroleum and Gas Minister Mr. Rameshwar Theli and others.
- India Energy Week is being organized from February 6 to 8 with the aim of showcasing India's growing power in the energy transition.
- The event will bring together leaders from the conventional and non-conventional energy industry, governments and academic institutions to discuss the challenges and opportunities of the country responsible for the energy transition.
- More than 30 ministers from all over the world will attend. 500 speakers, 1000 exhibitors and 30,000 delegates will discuss the challenges and opportunities for the future of Indian energy.
0 Comments