Recent Post

6/recent/ticker-posts

டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் - கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா / JADEJA BREAKS KAPILDEV RECORD

  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியானது டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. 
  • இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
  • 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா மொத்தம் 252 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 45 போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை படைத்தார். 
  • அனில் கும்ப்ளே 55 போட்டிகளில் 250 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனையை படைத்தார். ஹர்பஜன் சிங் 61 போட்டிகளில் இந்த சாதனையை படைத்தார்.
  • இதற்கு அடுத்ததாக கபில்தேவ் 65 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது ஜடேஜா 61 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதன் மூலம் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார். 
  • மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 250 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 5 வது இடத்தை பிடித்துள்ளார்.
  • அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 2500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். உலக கிரிக்கெட் அரங்கில் 2வது வீரர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel