Recent Post

6/recent/ticker-posts

நிஸ்ஸான் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / MOU BETWEEN TAMILNADU GOVERNMENT AND NISSAN


TAMIL
  • நிஸ்ஸான் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / MOU BETWEEN TAMILNADU GOVERNMENT AND NISSAN: ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனம், ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரேனால்ட் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிஸ்ஸான் ஆகிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.
  • தற்போது ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது முழு உற்பத்தித் திறனான 4.80 இலட்சம் கார்கள் உற்பத்தியில், 2 இலட்சம் கார்கள் அளவிற்குதான் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது.
  • RNAIPL மற்றும் RNTBCI நிறுவனங்கள், வாகன உற்பத்தி தளங்களை நவீன மயமாக்குவதற்கும், புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தவும் முன்வந்துள்ளன. 
  • தற்போதைய செயல்பாடுகளை விரிவுபடுத்துவது, அதாவது, உற்பத்தித் திறன் பயன்பாட்டை 2 இலட்சம் கார்களிலிருந்து 4 இலட்சம் கார்களாக விரிவுபடுத்துவது மற்றும் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகிய நோக்கங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 5,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. 
  • இதற்கான அரசாணையும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்டமாக, 3,300 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு அரசிற்கும் ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ENGLISH
  • Renault Nissan is a joint venture between Renault of France and Nissan of Japan. Currently, Renault Nissan Automotive India Pvt Ltd is producing only 2 lakh cars out of its full production capacity of 4.80 lakh cars.
  • RNAIPL and RNTBCI have come forward to modernize vehicle manufacturing facilities and introduce new models.
  • Expansion of existing operations i.e. expansion of production capacity utilization from 2 lakh cars to 4 lakh cars and investment of Rs 5,300 crore over the next 5 years for design and development purposes.
  • An ordinance for this has also been issued in January this year. In the first phase of this, an MoU was signed between the Government of Tamil Nadu and Renault Nissan Automotive India Pvt Ltd in the presence of the Hon'ble Chief Minister of Tamil Nadu today for an investment of Rs 3,300 crore and new employment for 2000 people.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel