பசுமை வளர்ச்சிக் குறித்து பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார் / Prime Minister addresses a post-Budget webinar on green growth
பசுமை வளர்ச்சிக் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்ட முன்னெடுப்புகளை திறம்பட அமல்படுத்துவதற்கு கருத்துக்களைக் கோரும் வகையில், பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையக் கருத்தரங்குகளின் முதலாவது பகுதி இதுவாகும்.
மத்திய மின்துறை அமைச்சகத்தின் தலைமையில் நடைபெறும் இணையக் கருத்தரங்கில், பசுமை வளர்ச்சியின் ஆற்றல் மற்றும் ஆற்றல் அல்லாத அம்சங்கள் இரண்டையும் உள்ளடக்கிய ஆறு அமர்வுகள் இருக்கும்.
தொடர்புடைய மத்திய அரசு அமைச்சகங்களின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் மாநில அரசுகள், தொழில்துறை, கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், இந்த இணையக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகளை வழங்குவார்கள்
பசுமை வளர்ச்சி என்பது 2023-24 மத்திய பட்ஜெட்டில் பசுமை தொழில்துறை மற்றும் பொருளாதார மாற்றம், சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மை மற்றும் நிலையான ஆற்றல் ஆகியவற்றை நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஏழு முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
0 Comments