டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி 134 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது.
பாஜக 104 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றது. அதன்படி நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றுள்ளார்.
மேயர், துணை மேயரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தம் 266 வாக்குகள் பதிவாகின. இதில், ஆம் ஆத்மியின் ஷெல்லி ஒபராய் 150 வாக்குகளையும், பாஜகவின் ரேகா குப்தா 116 வாக்குகளையும் பெற்றனர். இதனையடுத்து டெல்லி மேயராக ஷெல்லி ஒபராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
0 Comments