மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, மகாராஷ்டிராவின் புனேயில், “ஷிவ் சிருஷ்டி” என்ற சிவாஜி மஹராஜின் வாழ்வியல் அம்சங்களை உள்ளடக்கிய பூங்காவை திறந்துவைத்தார் / Union Minister of Home Affairs and Cooperatives Mr. Amit Shah inaugurates 'Shiv Srishti', a park in Pune, Maharashtra, depicting the biographical aspects of Shivaji Maharaj.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, மகாராஷ்டிராவின் புனேயில், “ஷிவ் சிருஷ்டி” என்ற சிவாஜி மஹராஜின் வாழ்வியல் அம்சங்களை உள்ளடக்கிய பூங்காவின் முதல் கட்டத்தை இன்று திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் திரு. தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, சுதந்திரப் போராட்டத்தில், சிவாஜி மஹராஜின் உன்னதப் பங்களிப்புக்கு மரியாதை செலுத்துவதாகக் கூறினார்.
சிவாஜி மஹராஜின் பிறந்தநாளையொட்டித் திறக்கப்பட்ட இந்த பூங்காவை, நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கடுகிறது.
0 Comments