Recent Post

6/recent/ticker-posts

மார்ச் 10ந்தேதி வரையிலான 2022-23 நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் அதிகரிப்பு / DIRECT TAX REVENUE FOR YEAR 2022 - 2023

  • மார்ச் 10ந்தேதி வரையிலான 2022-23 நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் குறித்த தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன. 
  • மார்ச் 10 வரையிலான மொத்த நேரடி வரி வசூல், வசூல் ரூ. 16.68 லட்சம் கோடி இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 22.58% அதிகம். 
  • இந்த வசூல் மொத்த பட்ஜெட் மதிப்பீடுகளில் 96.67% ஆகும். 2022-23 நிதியாண்டுக்கான நேரடி வரிகளின் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் இது 83.19% ஆகும்.
  • மொத்த வருவாய் வசூல் அடிப்படையில் கார்ப்பரேட் வருமான வரி (சிஐடி) மற்றும் தனிநபர் வருமான வரி (பிஐடி) ஆகியவற்றின் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்த வரையில், சிஐடியின் வளர்ச்சி விகிதம் 18.08% ஆகவும், பிஐடியின் (எஸ்டிடி உட்பட) வளர்ச்சி விகிதம் 27.57% ஆகவும் உள்ளது. பணத்தைத் திரும்பப்பெறுதலைச் சரிசெய்த பிறகு, சிஐடி வசூலில் நிகர வளர்ச்சி 13.62% ஆகவும், பிஐடி வசூலில் 20.73% (பிஐடி மட்டும்)/ 20.06% (எஸ்டிடி உட்பட பிஐடி) ஆகவும் உள்ளது.
  • ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 10, 2023 வரை ரூ.2.95 லட்சம் கோடி ரீபண்ட் மூலம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வழங்கப்பட்டதை விட இது 59.44% அதிகமாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel