Recent Post

6/recent/ticker-posts

ஜி20 பணிக்குழு சார்பில் கலாச்சார பாதுகாப்பு குறித்த உலகளாவிய இணையதள கருத்தரங்கு / Global Webinar on Cultural Conservation by G20 Working Group /

TAMIL

  • ஜி20 அமைப்பின் கலாச்சார பணிக்குழு சார்பில் கலாச்சார பாதுகாப்பு குறித்த உலகளாவிய இணையதள கருத்தரங்கு நடைபெற்றது.
  • யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் கலாச்சாரம் சார்ந்த பொக்கிஷங்களை பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
  • கருத்தரங்கில், நீண்ட கால பிரச்சனையான சட்டவிரோத கடத்தல் மற்றும் கலாச்சார பொக்கிஷங்களை பாதுகாத்தல் குறித்து 28 நாடுகளைச் சேர்ந்த 40 நிபுணர்கள் ஒருங்கிணைந்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். 
  • ஆக்கப்பூர்வமான முறையில் நடைபெற்ற இந்த விவாதத்தில் 12 சர்வதேச அமைப்புகளைச்சேர்ந்த பிரதிநிதிகளின் கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன.  
  • மேலும் சட்டவிரோத கடத்தல்களை தடுப்பதற்கு ஏதுவாக இடர்பாடு மேலாண்மை, அவசர கால நடவடிக்கை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்றும் இணையதளம் வாயிலான வர்த்தகத்தில் உள்ள சவால்கள் குறித்தும் அதனை எதிர்கொள்வதற்கான அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
  • இதேபோல் இணையதள வர்த்தகத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டும் எனவும் இந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
  • இதைத்தொடர்ந்து, நான்கு உலகளாவிய இணைய தள கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. இந்த கருத்தரங்குகள் வரும், ஏப்ரல் 13,19 மற்றும் 20ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன.

ENGLISH

  • A Global Webinar on Cultural Preservation was organized by the G20 Working Group on Culture. Organized in collaboration with UNESCO, the seminar discussed the preservation of cultural treasures.
  • At the seminar, 40 experts from 28 countries jointly expressed their views on the long-standing problem of illegal trafficking and the protection of cultural treasures.
  • The views of representatives from 12 international organizations were also put forward in this constructive discussion.
  • It was also discussed the need to take risk management, emergency measures etc. to prevent illegal trafficking and the challenges in online business and the ways to deal with it.
  • Similarly, it was emphasized in this seminar that guidelines should also be developed for internet commerce.
  • Following this, four global webinars will be held. These seminars are scheduled to be held on April 13, 19 and 20.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel