இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் ஒத்துழைப்புடன் பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள “அக்ரியுனிஃபெஸ்ட்” எனும் 5 நாள் கலாச்சார நிகழ்வின் தொடக்க விழாவில், மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பங்கேற்றார்.
இந்த விழாவில், 60 மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள்/ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்/மத்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 2500க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் 18 நிகழ்வுகளில் தங்களின் திறனை வெளிப்படுத்துவார்கள். இசை, நடனம், இலக்கியம், நாடகம், நுண்கலைகள் ஆகிய 5 பிரிவுகளில் இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்வில், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரண்ட்லாஜெ, கர்நாடக வேளாண் துறை அமைச்சர் திரு பி சி பாட்டீல், ஐசிஏஆர் துணைத் தலைமை இயக்குநர் (கல்வி) டாக்டர் ஆர் சி அகர்வால், துணைவேந்தர் டாக்டர் சுரேஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 Comments