Recent Post

6/recent/ticker-posts

குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 2023 / QUAD FOREIGN MINISTERS MEETING 2023

TAMIL
  • குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 2023 / QUAD FOREIGN MINISTERS MEETING 2023: பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
  • இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: ஐ.நா. சபையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா மிக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. 
  • இதற்கு குவாட் கூட்டமைப்பின் இதர 3 நாடுகளும் ஆதரவு அளித்துள்ளன. சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக குவாட் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளன.
  • பல்வேறு காரணங்களால் சர்வதேச விநியோக சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். விநியோக சங்கிலியை மேம்படுத்த வேண்டும். சர்வதேச டிஜிட்டல் துறையில் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன் மையை அதிகரிக்க வேண்டும். 
  • மேலும் சர்வதேச அளவில் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்த வேண்டும். இந்த துறைகளில் குவாட் கூட்டமைப்பு கவனம்செலுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
  • குவாட் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பகுதியில் தன்னிச்சையாக எல்லையை மாற்ற அனுமதிக்க முடியாது. இந்த கடல் பகுதிகளில் ஐநா. சபையின் கடல் விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும். பதற்றத்தை அதிகரிக்க செய்யும் நடவடிக்கைகளில் எந்த நாடும் ஈடுபடக்கூடாது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
  • தென் சீனக் கடல், கிழக்கு சீனக்கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ENGLISH

  • QUAD FOREIGN MINISTERS MEETING 2023: To control China's dominance in the Pacific Ocean and the Indian Ocean, 4 countries, the United States, Australia, Japan, and India have formed an alliance called the Quad. A meeting of foreign ministers of this organization was held in Delhi.
  • Foreign Minister Jaishankar said: U.N. India has been pushing for reforms in the council for a very long time.
  • This has been supported by the other 3 countries of the Quad alliance. The Quad countries are committed to working together against international terrorism.
  • International supply chains are affected due to various reasons. This problem needs to be solved. Improve the supply chain. We need to increase credibility and transparency in the international digital sector.
  • Also international transport links should be improved. It is in these areas that the Quad Consortium needs to focus. Minister Jaishankar spoke thus.
  • In a statement released by the Quad Federation, 'Arbitrariness in the Indian Ocean and Pacific Oceans cannot be allowed to be changed. UN in these marine areas. The Council's maritime rules must be strictly followed. "No country should engage in activities that increase tension," it said.
  • Many countries are protesting China's continued aggression in the South China Sea and East China Sea.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel