Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு சரக்கு போக்குவரத்து கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023 / TAMILNADU FRIGHT TRANSPORT POLICY & INTEGRATED FREIGHT TRANSPORT PLAN 2023

  • மாநிலத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு நம்பகமான, சிக்கனமான, நிலையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு போக்குவரத்துச் சூழல் அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போட்டித்திறனை ஊக்குவிக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

முக்கிய கருப்பொருட்கள் (Themes)

  • ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் வலுவான போக்குவரத்து உட்கட்டமைப்பினை உருவாக்குதல், குறைந்த செலவிலான மற்றும் உயர்ந்த தரத்திலான சேவைகள் கிடைக்கும் நிலையை ஊக்குவித்தல், ஒற்றைச்சாளர அனுமதி வழங்கும் அமைப்பை உருவாக்குதல், 
  • சரக்கு போக்குவரத்து சூழல்அமைப்பின் மீள்திறன் மற்றும் நிலைப்புத்தன்மையை உறுதி செய்தல் (Resilience & Sustainability), புதிய தொழில்நுட்ப உத்திகளைச் செயல்படுத்தல் (New Technology), சரக்கு போக்குவரத்துத் துறையில் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் (Skill Development) ஆகியவை இக்கொள்கையின் முக்கிய கருப்பொருட்கள் ஆகும்.
  • இக்கொள்கையின் மூலம் சரக்கு போக்குவரத்து துறைக்கு, "தொழில் அந்தஸ்து (Industrial Status) வழங்குதல், "ஒற்றை சாளர அனுமதி" (Single Window Clearances) வழங்குதல் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
  • மேலும், சரக்கு போக்குவரத்து துறையில் புதிய தொழில் நுட்ப உத்திகளை செயற்படுத்துதல், திறன் மேம்படுத்துதல், நிலைப்பு தன்மையை (Sustainability) உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு ஊக்கமளிக்கப்படும்.
  • "சரக்கு போக்குவரத்து செயல் திட்டம்" (Logistics Plan) மூலம் மூன்று பெருவழி தடங்களில் மட்டுமே, 50 செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 
  • இதன்மூலம் அடுத்த பத்தாண்டுகளில் ரூ.63,000 கோடி அளவிற்கு செயல் திட்டங்களும், 1.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel