Recent Post

6/recent/ticker-posts

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2023 / WORLD CUP SHOOTING CHAMPIONSHIP 2023

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் / World Cup Shooting Competition - Silver medal for Indian pair

  • மத்தியபிரதேசத்தின் போபாலில் ஐஎஸ்எஸ்எஃப் பிஸ்டல், ரைபிள் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.
  • இதன் 2-வது நாளான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் வருண் தோமர், ரிதம் சங்க்வான் ஜோடி தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் இயன் வெய், லியு ஜின்யாவோ ஜோடியை எதிர்த்து விளையாடியது.
  • இதில் வருண் தோமர், ரிதம் சங்க்வான் ஜோடி 11-17 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. 
  • தொடரின் 2-வது நாளின் முடிவில் சீனா 3 தங்கம், 2 வெண்கலத்துடன் 5 பதக்கங்கள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலத்துடன் 2-வது இடம் வகிக்கிறது.

  • போபாலில் நடக்கும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீரர் சரப்ஜோத் சிங் தங்கப் பதக்கம் வென்றார். 
  • இறுதிப் போட்டியில் அஜர்பைஜானின் ருஸ்லன் லுனெவுடன் மோதிய அவர் 16-0 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வென்று முதலிடம் பிடித்தார். 
  • ருஸ்லன் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைந்தார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் வருண் தோமர் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். 
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - வெண்கலம் வென்றார் ருத்ராங்க்‌ஷ் / World Cup Shooting Competition - Rudranksh wins bronze
  • மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ருத்ராங்க்‌ஷ் பாட்டீல் 262.3 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் பெற்றார். சீனாவைச் சேர்ந்த ஷெங் லிஹாவோ, டியு லின்ஷு முறையே தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றனர். 
  • 3-வது நாளின் முடிவில் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. 5 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் சீனா முதலிடம் வகிக்கிறது. இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் - வெண்கலம் வென்றார் இந்தியாவின் மனுபாகர் / World Cup Shooting - India's Manupakar wins bronze
  • மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பதக்க போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனுபாகர் 20 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
  • ஜெர்மனியின் டோரீன் 30 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கமும், சீனாவின் யு ஸியு 29 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். சர்வதேச போட்டியில் மனுபாகர் இரு வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் பதக்கம் பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel