Recent Post

6/recent/ticker-posts

பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வை பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister inaugurated the 3rd session of the National Platform for Disaster Risk Reduction

  • பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த 3-வது நிகழ்வின் முக்கிய கருப்பொருள் "மாறிவரும் பருவநிலையில் உள்ளூர் விரிவாற்றலைக் கட்டமைத்தல்" ஆகும். 
  • இந்த நிகழ்வின் போது, சுபாஷ் சந்திரபோஸ் மேலாண்மை விருது பெற்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். 2023- புரஸ்கார் விருது வென்றவர்கள்: ஒடிசா மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மிசோரமின் லுங்கிலி தீயணைப்பு நிலையம் ஆகும்.
  • மேலும் பேரிடர் ஆபத்து குறைத்தல் துறையில் புத்தாக்க சிந்தனைகள், முன்முயற்சிகள், கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார். 
  • இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் ஆகியோரும் கலந்துகொண்டனர். 
  • என்பிடிஆர்ஆர் எனப்படும் பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசியத் தளம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • பேரிடர் மீட்புத் தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளவும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும், ஆலோசனைகளைத் தெரிவிக்கவும் செயல்திட்ட அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இது வகை செய்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel