Recent Post

6/recent/ticker-posts

சீன வரலாற்றில் அரிய நிகழ்வு 3வது முறையாக அதிபராக ஜின்பிங் தேர்வு / A rare event in Chinese history is the election of Xi Jinping as President for the 3rd term:

  • உலகின் 2வது பெரிய பொருளாதாரத்தையும், வலிமையான ராணுவத்தையும் கொண்ட சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் கடந்த 2012ம் ஆண்டு முதல் முறையாக பொறுப்பேற்றார்.
  • சீன கட்சியின் நிறுவனர் மா சேதுங்கால் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ஜி சோங்ஷூனின் மகனான ஜின்பிங் ஆரம்பத்தில் பெரிய அளவில் அறியப்படாத தலைவராக இருந்தாலும், 2012ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கினார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரே அதிபராக இருப்பார்.
  • சீன அரசியலமைப்பு சட்டப்படி 2 முறைக்கு மேல் எந்த தலைவரும் அதிபராக பதவி வகிக்க முடியாது. இந்த அரசியலமைப்பை கடந்த 2018ல் திருத்தினார் ஜின்பிங். 
  • இதன் மூலம் 3வது முறையாக கட்சியின் தலைவராக கடந்த ஆண்டு அக்டோரில் தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, சீன நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் மாநாடு நடந்தது. 
  • இதில் நாடாளுமன்றத்தின் 2,952 உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராகவும், ராணுவத்தின் தலைவராகவும் ஜின்பிங்கை நியமிக்க ஒப்புதல் அளித்தனர். 
  • இதன் மூலம் சீன வரலாற்றில் மா சே துங்குக்குப் பிறகு முதல் முறையாக 3வது முறையாக ஜின்பிங் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel