Recent Post

6/recent/ticker-posts

370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் முதல்முறையாக அந்நிய நேரடி முதலீடு / First FDI in Kashmir after abrogation of Article 370

  • ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு கடந்த 2019ம் ஆண்டு நீக்கப்பட்டது. அதன் பிறகு ஜம்மு காஷ்மீரின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. 
  • அதன்ஒரு பகுதியாக, நேரடி அந்திய முதலீட்டின்கீழ், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வணிக வளாகமும், பன்னோக்கு கோபுரமும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 
  • இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள, துபாயின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான புர்ஜ் கலிபா, துபாய் வணிக வளாகங்களை அழகுற கட்டிய எம்மார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. வணிக வளாகம், பன்னோக்கு உயர் கோபுரங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 
  • ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் விவேக் ஓபராய், நீது சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel