பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஏற்கனவே ஜனவரி 2023யில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அகவிலைப்படி தற்போது 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments