Recent Post

6/recent/ticker-posts

தமிழகத்தில் நான்கு மிதக்கும் கப்பல் தளம் / 4 FLOATING SHIPYARDS IN TAMILNADU

  • ஒன்றிய அரசு சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 
  • அதில் பழமையான முறையில் நிரந்தர கப்பல் இறங்கு தரைகளை அமைப்பதற்குப் பதிலாக மிதக்கும் இறங்கு தளங்களை உருவாக்க அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 
  • இந்த மிதக்கும் இறங்கு தளங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும், நவீனத்துவம் மிக்கதாகவும் நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும் உள்ளன.
  • இந்நிலையில், தமிழ்நாட்டில் கூடுதலாக தமிழ்நாட்டில் நான்கு மிதவை இறங்கு தளங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • இந்தியாவின் ஆன்மீக தலமான ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம் ஆகிய இடங்களில் இவை அமைக்கப்பட உள்ளன. 
  • மேலும் கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய இடங்களிலும் இந்த இறங்கு தளங்கள் அமைய உள்ளது. 
  • இதைத்தவிர கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 11 மிதவை இறங்கு தளங்களை அமைக்க ஒன்றிய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel