ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழுவானது, கடந்த 2022ம் ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பினால் பாதிக்கப்பட்ட அசாம், இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் கூடுதலாக ரூ.1816 கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அசாம் ரூ.520 கோடி, இமாச்சலப்பிரதேசம் ரூ.239 கோடி, கர்நாடகா ரூ.941 கோடி, மேகாலயா ரூ.47 கோடி மற்றும் நாகலாந்துக்கு ரூ.68 கோடியும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
0 Comments