தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த திட்டம்: ரூ.8,200 கோடி அளிக்கிறது உலக வங்கி / Plan to improve health in 7 states including Tamil Nadu: World Bank provides Rs.8,200 crores
கொரோனா பெருந்தொற்று பரவலுக்குப் பின், நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மருத்துவ அவசரநிலையை எதிர்கொள்ள தேவையான வசதிகளை மேம்படுத்தவும், மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்காகவே, பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு திட்டத்தை 2021 அக்., மாதம் மத்திய அரசு துவங்கியது. இத்திட்டத்தின் வாயிலாக, நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்திட்டத்திற்கு, 8,200 கோடி ரூபாய் கடன் அளிக்க உலக வங்கி முன்வந்து உள்ளது. இதற்கான கடன் ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே கையெழுத்தானது.
மத்திய அரசு தரப்பில், பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலர் ரஜத்குமார் மிஸ்ராவும், உலக வங்கி தரப்பில் வங்கியின் இந்தியப்பிரிவு இயக்குனர் ஆகஸ்டி டானோ கோமேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த கடன் தொகை வாயிலாக, தமிழகம், ஆந்திரா, கேரளா, மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
0 Comments