Recent Post

6/recent/ticker-posts

நாகலாந்து, மேகாலயாவில் பா.ஜ கூட்டணி அரசுகள் பதவி ஏற்பு: கன்ராட் சங்மா, நெய்பியூ ரியோ மீண்டும் முதல்வரானார்கள் / BJP coalition governments take office in Nagaland, Meghalaya: Conrad Sangma, Naibyu Rio re-elected as CMs

  • மேகாலயா, நாகலாந்து, திரிபுராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 26 தொகுதிகளை ஆளும் தேசிய மக்கள் கட்சி கைப்பற்றியது. 
  • பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், பாஜ உள்ளிட்ட பிற கட்சிகள் முதல்வர் கான்ராட் சங்மாவுக்கு ஆதரவு அளித்துள்ளன. 
  • இதனால், பாஜவின் இரண்டு எம்எம்ஏக்கள் உள்பட 45 எம்எல்ஏக்களின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளது. அதையடுத்து கான்ராட் சங்மா நேற்று இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருடன் சேர்த்து 12 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். 
  • கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் பாகு சவுகான் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் பங்கேற்றனர்.
  • நாகலாந்தில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பாஜ கூட்டணி மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. 
  • இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நெய்பியூ ரியோ தலைமைக்கு ஆதரவு அளித்தன. இதையடுத்து 60 உறுப்பினர்கள் ஆதரவுடன் நெய்பியூ ரியோ 5வது முறையாக நாகலாந்து முதல்வராக நேற்று மீண்டும் பதவியேற்றார். ஆளுநர் இல.கணேசன், முதல்வர் நெய்பியூ ரியோவுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். 
  • இதற்கு முன்பு எஸ்சி ஜமீர் 1980, 1982-86, 1989-90, 1993-2003 வரை முதல்வராக பதவி வகித்தார். அந்த சாதனையை நெய்பியூ ரியோ முறியடித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel