Recent Post

6/recent/ticker-posts

நானோ' டிஏபி உரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் / CENTRAL GOVERNMENT APPROVES NANO DAP FERTILIZER

  • வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்கள், சாகுபடி நடைமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 
  • இதன்படி, இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனமான 'இப்கோ' சார்பில் குஜராத்தின் காந்திநகர் மாவட்டம் கலோலில், நானோ யூரியா ஆலை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 
  • இங்கு 45 கிலோ பாக்கெட் யூரியாவுக்கு பதிலாக 500 மி.லி. அளவில் திரவ யூரியா (நானோ யூரியா) தயாரிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தினால் 8 சதவீதம் அளவுக்கு சாகுபடி அதிகரிக்கிறது. 
  • இதைத் தொடர்ந்து, கலோலில், நானோ டிஏபி உரம் தயாரிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
  • '50 கிலோ எடை கொண்ட டிஏபி உரத்தின் விலை ரூ.4,000. இது விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ.1,400-க்கு வழங்கப்படுகிறது. 
  • தற்போது கலோலில் ரூ.250 கோடி செலவில் நானோ டிஏபி உரம் தயாரிக்கும் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. 500 மி.லி. நானோ டிஏபி உரம் விவசாயிகளுக்கு ரூ.600 விலையில் வழங்கப்படும்
  • 'நானோ யூரியாவை தொடர்ந்து, நானோ டிஏபி உரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தின் கீழ் நானோ டிஏபி உரம் தயாரிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel