Recent Post

6/recent/ticker-posts

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்ட புதிய கேலரி - முதல்வர் திறந்து வைத்தார் / The Chief Minister inaugurated a new gallery named after Karunanidhi at the Chepakkam Cricket Ground

  • இந்தியாவில் உள்ள பழமைவாய்ந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் உள்ளது. இந்த மைதானம் கடந்த 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டது. 
  • அப்போது ஐ, ஜே, கே ஆகிய 3 கேலரிகள் புதிதாக அமைக்கப்பட்டன. ஆனால் இந்த 3 கேலரிகளும் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி சீல் வைக்கப்பட்டது. இந்த பிரச்சினைகளும், ஒப்பந்த புதுப்பிப்புக்கும் கடந்த 2021-ம் ஆண்டு தீர்வு காணப்பட்டது.
  • இதைத் தொடர்ந்து 2022-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் பழைய பெவிலியன் கட்டிடம் இடிக்கப்பட்டது. இந்த இடத்தில் புதுப்பொலிவு மற்றும் நவீன வசதிகளுடன் பெவிலியன் கட்டப்பட்டுள்ளது.
  • புதிதாக கட்டப்பட்டுள்ள பெவிலியன் கேலரியின் திறப்பு விழா நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெவிலியனை திறந்து வைத்தார். 
  • தொடர்ந்து பெவிலியனில் அமைக்கப்பட்டுஉள்ள கேலரியும் திறக்கப்பட்டது. இந்த கேலரிக்கு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel