மஹாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேகா யாதவ். 55 வயதான இவர், ஆசியாவின் முதல் பெண் ரயில் டிரைவர் என்ற பெருமையைப் பெற்றவர்.இந்த சாதனைக்காக, மாநிலம் மற்றும் தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இப்படி 34 ஆண்டுகள் ரயில் டிரைவர் பணியில் அனுபவமுள்ள சுரேகா யாதவ், நேற்று வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளார்.
இவர், மஹாராஷ்டிராவில் உள்ள சோலாபூரில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் வரை, வந்தே பாரத் ரயிலை இயக்கி உள்ளார். இதன் மூலம் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் டிரைவர் என்ற பெருமையையும் சுரேகா யாதவ் பெற்றுள்ளார்.
0 Comments