வடகிழக்கு ரயில்வேயின் முக்கிய முக்கிய சாதனையாக துதானி -மேன்டிபதர் ஒற்றை ரயில்பாதை மற்றும் அபயபுரி- பஞ்சரத்னா இரண்டைப் ரயில்பாதையும், 2023, மார்ச் -15ல் முழுமையாக மின் மயமாக்கப்பட்டுள்ளன.
மத்திய ரயில்வே மின்மயமாக்கல் அமைப்பு இந்த வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணியை மேற்கொண்டது.
மேகாலயாவில் ஒரே ரயில் நிலையமான மேன்டிபதர் 2014ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்த வழித்தடம் மின்மயமாக்கப்பட்டபின், ரயில்களின் வேகம் அதிகரிக்கும் என்பதுடன், பயணிகள் மற்றும் சரக்குப்போக்குவரத்தும் அதிகரிக்கும். குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்கப்படுவதற்கான சூழலும் அதிகமாகும்.
வடகிழக்குப் பகுதிகளில் ரயில்களை மின்மயமாக்குவது, அந்த மாநிலங்களில் போக்குவரத்தை மேம்படுத்தும். அத்துடன், புதைபடிம எரிபொருளில் இருந்து மின்சாரத்திற்கு மாறுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடும் தவிர்க்கப்படும்.
0 Comments