ஸ்டார்ட்-அப் மற்றும் குறு, சிறு நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும் விதமாக இந்தியா அஞ்சல் துறை, ஷிப்ராக்கெட் என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் / India Post ties up with Shiprocket to benefit start-ups and MSMEs
நாடு முழுவதும் மின்னணு வர்த்தக விநியோக சேவையை கடைக்கோடிக்கும் வழங்கும் முறையை ஊக்குவிக்க இந்திய அஞ்சல் துறை, ஷிப்ராக்கெட் என்ற நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அஞ்சலக சேவைகள், தலைமை இயக்குனர் திரு அலோக் சர்மா மற்றும் ஷிப்ராக்கெட், பிக்கர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் அடிப்படையில் சுமார் 3 லட்சத்திற்கும் மேலாக வலிமையான விற்பனை தளத்தைக் கொண்டிருக்கும் ஷிப்ராக்கெட் நிறுவனத்தினால் கடைக்கோடிக்கும் சென்றடையும் வகையில் விநியோக சேவைகள் அளிக்க முடியும். இதன் விளைவாக நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்.
0 Comments