குறைகடத்தி விநியோகச் சங்கிலி மற்றும் புத்தாக்க கூட்டுமுயற்சியை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்து / India, US sign MoU to establish semiconductor supply chain and innovation partnership
புதுதில்லியில் வர்த்தகப் பேச்சுவார்த்தை 2023 நிறைவடைந்த பிறகு, இந்திய - அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை செயல்திட்டத்தின் கீழ் குறைகடத்தி விநியோகச் சங்கிலி மற்றும் புத்தாக்க கூட்டுமுயற்சியை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டன.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலின் அழைப்பை ஏற்று, அமெரிக்க வர்த்தக அமைச்சர் திருமிகு கீனா ரைமோண்டோ புதுதில்லி வந்துள்ளார்.
அவரது வருகையை முன்னிட்டு இரு நாடுகளிடையே புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஈர்ப்பதற்கான ஒத்துழைப்பு குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய- அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
இந்தியாவின் குறைகடத்தி இயக்கம் மற்றும் அமெரிக்காவின் சிப்ஸ் மற்றும் அறிவியல் சட்டத்தின் அடிப்படையில் குறைகடத்தி விநியோகச் சங்கிலி மீள்தன்மை மற்றும் பன்முகத்தன்மை குறித்து இரு நாடுகளின் அரசுகளிடையே ஒருங்கிணைந்த இயக்கமுறையை உருவாக்குவது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பரஸ்பர நன்மை பயக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறமை மற்றும் திறன் மேம்பாட்டில் இந்த ஒப்பந்தம் கவனம் செலுத்தும்.
ENGLISH
After the conclusion of the 2023 trade talks in New Delhi, India and the US signed a memorandum of understanding to establish a semiconductor supply chain and innovation partnership under the Indo-US Trade Dialogue Action Plan.
US Commerce Minister Keena Raimondo has arrived in New Delhi on the invitation of Union Commerce and Industry Minister Piyush Goyal.
Ahead of his visit, the India-US trade talks were held today to discuss cooperation to attract new trade and investment opportunities between the two countries.
The main objective of this MoU is to create a coordinated mechanism between the governments of both countries on semiconductor supply chain resilience and diversity based on India's semiconductor initiative and the US's Chips and Science Act.
The agreement will focus on mutually beneficial research and development, talent and capacity building.
0 Comments