Recent Post

6/recent/ticker-posts

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்ற இந்திய அணி / Indian team qualified for the World Test Championship final

  • ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறும் என கூறப்பட்டது. 
  • அதே நேரத்தில் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏதேனும் ஒரு போட்டியில் வென்றால் கூட பைனலுக்கு தகுதிப்பெறும் என்ற சூழலில், முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டியிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்றிருந்தது. இதன்மூலம் ஆஸி., அணி பைனலுக்கு தகுதி பெற்றது.இதனால் 4வது போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
  • இந்தியா - ஆஸி., அணிகளுக்கு இடையேயான 4வது போட்டியும், இலங்கை - நியூசி., அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியும் துவங்கின.இதில், நியூசிலாந்து அணி, இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 
  • இந்த தோல்வியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான பந்தயத்தில் இருந்து இலங்கை வெளியேறி, இந்திய அணி பைனலுக்கு தகுதி பெற்றது.
  • வரும் ஜூன் 7ல் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel