பெர்லின் ஐடிபி-யில் சர்வதேச தங்க நகர நுழைவாயில் சுற்றுலா விருதுகள் 2023-ல் சர்வதேச தொலைக்காட்சி மற்றும் சினிமா வர்த்தகம் மற்றும் சர்வதேச நாடு பிரிவில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி நட்சத்திர விருதுகளை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வென்றுள்ளது.
பெர்லினில் 7-ம் தேதி முதல் 9-ம் வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 8-ம் தேதி அன்று, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சக செயலாளர் திரு அரவிந்த் சிங் பெற்றுக்கொண்டார்.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. திரைப்பட மற்றும் சுற்றுலாத்துறை நிபுணர்களைக் கொண்ட சர்வதேச நடுவர் குழுவினர் விருது பெறுவோரை தேர்ந்தெடுக்கின்றனர். ஐடிபி பெர்லினில் நடைபெறும் உலகின் முன்னணி சுற்றுலா வர்த்தகக் காட்சியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
0 Comments