Recent Post

6/recent/ticker-posts

பெண்களுக்கு ஒதுக்கீடு ஸ்பெயினில் புது அறிவிப்பு / NEW WOMEN RESERVATION POLICY IN SPAIN

  • சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில், பெண்களுக்கான சலுகைகளை பல்வேறு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
  • அந்த வகையில், ஐரோப்பிய நாடான ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் வெளியிட்ட அறிக்கை:பாலின இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, விரைவில் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
  • அதன்படி, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும், 250க்கும் அதிகமான ஊழியர்களை உடைய நிறுவனங்களின் நிர்வாக குழுவில், 40 சதவீதம் பெண்களை நியமிக்க வேண்டும். 
  • மேலும், தேர்தலில் போட்டியிடுவதிலும், அமைச்சரவையிலும் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க இந்த சட்டம் வழிவகுக்கும். 
  • சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு சம பங்காக இருக்க வேண்டுமெனில், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அவர்கள் பாதிக்கு பாதி அங்கம் வகிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel