கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டு பகுதியிலிருந்து கிருஷ்ணராஜபுரா வரை 13.7 கி.மீ தூரத்துக்கு ரூ.4,250 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து அவர் புதிய வழித்தடத்தில் பயணம் செய்தார். அப்போது ரயிலில் பயணம் செய்த பல தரப்பினருடன் அவர் கலந்துரையாடினார்.
முன்னதாக கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபுரா மாவட்டத்தின் முத்தேனஹள்ளி அருகே உள்ள சத்யசாய் கிராமத்தில் ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை (எஸ்எம்எஸ்ஐஎம்எஸ்ஆர்) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதை ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக்கழகம் நிறுவியுள்ளது. இந்தக் கல்லூரி இந்தக் கல்வி ஆண்டு முதல் செயல்படுகிறது. ம
ருத்துவக் கல்வியை வியாபாரம் அற்றதாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்குடன், இந்த மருத்துவக் கல்லூரி கிராமப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்வி மற்றும் தரமான மருத்துவ சிகிச்சையை முற்றிலும் இலவசமாக வழங்கவுள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் மற்றும் மதுசூதன் சாய் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
0 Comments