தமிழக அரசின் நீடித்த வளர்ச்சி இலக்கிற்கான புத்தகங்கள் மற்றும் 'லோகோ'வை, முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில், 2030ம் ஆண்டுக்குள், நீடித்த வளர்ச்சி அடைய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதை அடையும் வகையில், அரசின் செயல்பாடுகளை விளக்க, புத்தகங்கள் மற்றும் லோகோ தயார் செய்யப்பட்டு உள்ளது. இவற்றை தலைமைச் செயலகத்தில், முதல்வர் வெளியிட்டார்.
அத்துடன், நீடித்த வளர்ச்சி இலக்கு குறித்து மக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்துவதற்கான சமூக ஊடகங்களையும், முதல்வர் துவக்கி வைத்தார்.மக்கள், வளம், புவிக்கோள், அமைதி, கூட்டாண்மை ஆகியவை, நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஐந்து அடிப்படை கொள்கைகள்.
இதை கருத்தில் வைத்து, அரசு முன்னெடுத்துள்ள முயற்சிகளை விவரிக்கும் வகையில், திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளின் பயன்களை கண்காணிக்க தேவையான தகவல்கள், புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
லோகோவில், 'எல்லோருக்கும் எல்லாமும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில், அமைச்சர் தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் விக்ரம் கபூர் பங்கேற்றனர்.
0 Comments