Recent Post

6/recent/ticker-posts

பிரதமரின் உஜ்வாலா பயனாளிகளுக்கு மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves subsidy to Prime Minister's Ujjwala beneficiaries

  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கான மத்திய அமைச்சரவை குழு பிரதமரின் உஜ்வாலா பயனாளிகளுக்கு 14.2 கிலோ எரிவாயு உருளைக்கு ரூ. 200 என்று அதிகபட்சம் ஆண்டுக்கு 12 முறை எரிவாயு நிரப்புவதற்கு மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2021 மார்ச் 1 ஆம் தேதி படி 9.59 கோடி பிரதமரின் உஜ்வாலா பயனாளிகள் நாட்டில் உள்ளனர். இந்த மானியத்திற்காக 2022-2023 நிதியாண்டில் 6100 கோடி ரூபாயும், 2023 - 2024 நிதியாண்டில் 7680 கோடி ரூபாயும் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. 
  • இந்த மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. இந்த மானியம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.
  • 2019- 20 இல் 3.01 ஆக இருந்த சமையல் எரிவாயு உருளைப் பயன்பாடு 2021-22 ல் 20 சதவீதம் அதிகரித்து 3.68 ஆக உள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகள் அனைவரும் இந்த மானியத்தை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
  • கிராமப்புற, ஒடுக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு சுத்தமான சமையல் எரிபொருளை வழங்கும் முயற்சியாக, இலவச சமையல் எரிவாயு உருளைகளை ஏழைப் பெண்களுக்கு வழங்கும் நோக்கில், கடந்த 2016 மே மாதத்தில் உஜ்வாலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel