Recent Post

6/recent/ticker-posts

சென்னை ஐஐடியில் 'அனைவருக்கும் ஐஐடிஎம்' திட்டத்தில் 1 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு செய்முறை பெட்டகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் / 'IITM for All' scheme at IIT Chennai to provide 1 lakh govt school students with electronic recipe vault: Chief Minister M.K.Stalin

  • அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டமானது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சரால் 5.1.2023 அன்று சென்னை ஐஐடி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டு அன்று முதல் 8.2.2023 வரை 6 கட்டங்களாக 250 பள்ளிகளை சேர்ந்த 500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளை சேர்ந்த சுமார் 250 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு வார காலம் சென்னை ஐஐடியில் அடிப்படை கணிதம் மற்றும் அறிவியல் குறித்த உண்டு உறைவிட பயிற்சியும் அளிக்கப்பட்டது.
  • சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக 1 லட்சம் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்ட மின்னணு செய்முறை பெட்டகங்களை அப்பள்ளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் வழங்கினார். 
  • அப்போது, சென்னை-ஐஐடிக்கும் பள்ளிக்கல்வி துறைக்கும் இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • இதன்மூலம், 250 அரசு பள்ளிகளின் 1 லட்சம் மாணவர்கள் மின்னணு சார்ந்த செய்முறை பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள்.
  • இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, 'தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு' என்ற புதிய திட்டத்தையும் முதல்வர் அறிவித்தார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel