Recent Post

6/recent/ticker-posts

11 தமிழக பொருட்களுக்கு கிடைத்தது புவிசார் குறியீடு / GI TAG FOR 11 TAMILNADU PRODUCTS

 

  • இந்தியாவிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. 
  • புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும். அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு உட்பட 45 உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
  • இந்த நிலையில், மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
  • இதனையடுத்து புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து, இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.
  • இதில் கர்நாடகா 2வது இடத்திலும், உத்தரபிரதேசம் 3வது இடத்திலும் உள்ளது. மேலும் 15க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க தமிழக அரசு விண்ணப்பம் செய்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel