Recent Post

6/recent/ticker-posts

உலக அளவில் 13-வது சிறந்த விருந்தோம்பல் மற்றும் மேலாண்மை நிறுவனமாக சென்னை ஐஎச்எம் நிறுவனம் தேர்வு / IHM Chennai has been selected as the 13th best hospitality and management company globally



  • CEOWORLD என்ற அமெரிக்க பத்திரிகையின் 2023-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஎச்எம் நிறுவனத்திற்கு 13-வது இடம் கிடைத்துள்ளது. 
  • அதே நேரத்தில் இந்தியாவின் தலைசிறந்த விருந்தோமல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் முதலாமிடம் கிடைத்துள்ளது. இந்த இந்த தரவரிசை ஏழு அறிவியல் சார் அளவீடுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு 38-வது இடத்தில் இருந்த சென்னை ஐஎச்எம் நிறுவனம், தரவரிசையில் படிப்படியாக முன்னேறி இந்த ஆண்டு 13-வது இடத்தை பிடித்துள்ளது. 2017-ம் ஆண்டு 34ம் இடத்திற்கும், 2018-ம் ஆண்டு 28-ம் இடத்திற்கும் முன்னேறியது. 
  • தொடர்ந்து 2019-ம் ஆண்டு 24-ம் இடத்தையும், 2020-ம் ஆண்டு 22-ம் இடத்தையும் பிடித்திருந்தது. அதேநேரத்தில் 2021ம் ஆண்டு 18-ம் இடத்திற்கு முன்னேறிய இந்நிறுவனம், கடந்த ஆண்டு 14-ம் இடத்தில் இருந்தது.
  • வளாக ஆள்சேர்ப்பு மூலம் முன்னணி நட்சத்திர ஹோட்டல்கள், விரைவு சேவை உணவகங்கள், கிளவுட் கிச்சன்கள், சில்லரை வணிகத்துறைகள் ஆகியவை இந்த தரவரிசைக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel