சிஏபிஎப் காவலர்கள் ( பொதுப்பணி) தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் / Union Ministry of Home Affairs approves conducting CAPF Constables (Public Service) examination in 13 regional languages besides Hindi and English
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் எடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவின்படி, மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு (சிஏபிஎப் ) காவலர்கள் (பொதுப் பணி) தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் நடத்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை அமைச்சருமான திரு.அமித் ஷாவின் முயற்சியில், உள்ளூர் இளைஞர்கள் சிஏபிஎப்-ல் சேர்வதற்கும், பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர, வினாத்தாள் பின்வரும் 13 பிராந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் - அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி & கொங்கனி
0 Comments