துருக்கி நாட்டில் தற்போது உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஸ்டேஸ்ஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று நடைபெற்றது.
இதில், பெண்களுக்கான தனிநபர் இறுதிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஜோதி சுரேகா வெண்ணாம் என்ற வீராங்கனை தரவரிசையில் 3 ஆம் இடத்தில் உள்ள கொலம்பியாவின் சாரோ லோபவை 149-146 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
அதேபோல் நடைபெற்ற காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம்-ஒஜாஸ் தியோதால் இணை 159-154 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் சென் யி ஹூன்-சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றனர்.
விஜயவாடாவை சேர்ந்த 26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
0 Comments