Recent Post

6/recent/ticker-posts

வாரணாசியில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் 100வது ஜி20 கூட்டம் / 100th G20 meeting under India's G20 chairmanship in Varanasi

  • இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ்,100வது ஜி20 கூட்டத்தை ஏற்பாடு செய்து இருப்பதன் மூலம் ஒரு முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. வாரணாசியில் வேளாண் துறையின் தலைமை விஞ்ஞானிகளின் கூட்டமானதே இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நடக்கும் 100வது ஜி20 கூட்டமாகும். 
  • 2வது சுகாதார பணிக்குழுக் கூட்டம் கோவாவிலும், இரண்டாவது டிஜிட்டல் பொருளாதார பணிக்குழுக் கூட்டம் ஐதராபாத்திலும், விண்வெளி பொருளாதார தலைவர்களுக்கான முன்நிகழ்வு கூட்டம் ஷில்லாங்கிலும் நடைபெற்றது.
  • கடந்த 16 நவம்பர் 2022ல் நடைபெற்ற ஜி20 பாலி உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜி20 தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தியாவின் ஓராண்டுகால ஜி20 தலைமைத்துவ பொறுப்பு 1 டிசம்பர் 2022 அன்று தொடங்கப்பட்டு வரும் 30 நவம்பர் 2023 வரை இருக்கும். 
  • முன்னதாக 8 நவம்பர் 2022ல் ஜி20 இலச்சினையும், ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருள் "வசுதெய்வ குடும்பகம் - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" போன்றவற்றை பிரதமர் முன்மொழிந்து தொடங்கி வைத்தார். 
  • நமது தேசியக்கொடியின் வண்ணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ஜி20 இலச்சினை, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பூமிக்கு ஆதரவான நமது அணுகுமுறை மற்றும் வளர்ச்சியை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel