Recent Post

6/recent/ticker-posts

பிபா தரவரிசை 2023 - அர்ஜெண்டினா முதலிடம் / FIFA Ranking 2023 - Argentina tops

  • அர்ஜெண்டினா அணி கடந்த மாதம் நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியில் இரு ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது. இதன் மூலம் தரவரிசையில் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு முதலிடத்தை பிடித்துள்ளது. 
  • அந்த அணி 6 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேவேளையில் கடந்த மாதம் இறுதியில் மொரோக்கோவிடம் தோல்வி அடைந்த பிரேசில் அணியானது தரவரிசையில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
  • பிபா உலகக் கோப்பையில் 2-வது இடம் பிடித்துள்ளது பிரான்ஸ். தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை அடைந்துள்ளது அந்த அணி. 
  • சமீபத்தில் நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தகுதி சுற்றில் நெதர்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றி கண்டிருந்தது.
  • பெல்ஜியம் 4-வது இடத்தில் தொடர்கிறது. இத்தாலி உள்ளிட்ட இரு அணிகளுக்கு எதிராக சமீபத்தில் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி 5-வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து, குரோஷியா, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய அணிகள் முறையே 6 முதல் 10-வது இடங்களில் உள்ளன.
  • ஸ்பெயின், போர்ச்சுகலுடன் இணைந்து 2030-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை நடத்த விருப்பம் தெரிவித்துள்ள மொராக்கோ 11-வது இடத்தில் தொடர்கிறது. 
  • அதேவேளையில் 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை இணைந்து நடத்த உள்ள அமெரிக்கா 13-வது இடத்திலும், மெக்சிகோ 15-வது இடத்திலும், கனடா 6 இடங்கள் முன்னேறி 47-வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • ஆசிய அணிகளில் ஜப்பான் 20-வது இடத்தை பிடித்துள்ளது. 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை நடத்திய கத்தார் 61-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து அணி 5 இடங்கள் முன்னேறி 101-வது இடத்தை பிடித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel