Recent Post

6/recent/ticker-posts

2023 மார்ச்சில் பணவீக்கம் / INFLATION RATE MARCH 2023

  • தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த மார்ச் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 5.66 சதவீதமாக குறைந்துள்ளது.
  • இது, ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய பணவீக்க இலக்கான 6 சதவீதத்துக்குள்ளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இதுவே, கடந்த பிப்ரவரியில் 6.44 சதவீதமாக இருந்தது.
  • மேலும் கடந்த ஆண்டு மார்ச்சில் சில்லரை விலை பணவீக்கம் 6.95 சதவீதமாக இருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.66 சதவீதமாக குறைந்ததற்கு, உணவுப் பொருட்கள் விலை குறைந்தது முக்கியமான காரணமாக அமைந்து உள்ளது
  • தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகளின் படி, மார்ச் மாதத்தில் உணவுப் பொருட்கள் பணவீக்கம் 4.79 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே, பிப்ரவரியில் 5.95 சதவீதமாகவும்; கடந்த ஆண்டு மார்ச்சில் 7.68 சதவீதமாகவும் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  • சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel