ஸ்பெயினில் நடைபெற்ற மெனார்கா ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, 3000 யூரோக்களை பரிசாக வென்றுள்ளார் தமிழ்நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டரான குகேஷ்.
9 சுற்றுகள் நடைபெற்ற இந்த செஸ் தொடரில், 8 பேர் பங்கெடுத்தனர். 9 சுற்றுகளில் அனைவருமே 7 புள்ளிகள் பெற்று சமன் செய்திருந்தனர். இருப்பினும் குகேஷ் மற்றும் மற்றொரு இந்திய வீரர் பிரணவ் இடையே டை பிரேக்கர் புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளருக்கான பிளிட்ஸ் போட்டி நடைபெற்றது.
பிளிட்ஸ் டை பிரேக்கரில் பிரணவை 1.5-0.5 என்ற புள்ளிகளில் வீழ்த்தி முதலிடம் பிடித்து, குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். வெற்றி பெற்ற குகேஷுக்கு 3000 யூரோ பரிசாக வழங்கப்பட்டது. இந்த சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இளம் இந்தியர் என்ற பெருமையும் குகேஷ் பெற்றுள்ளார்.
0 Comments