ஒவ்வொரு ஆண்டும், திருநங்கையர் தினமான ஏப்., 15ல், அவர்களை சிறப்பிக்கும் வகையில், அரசு விருது வழங்குகிறது.
விருது பெறும் திருநங்கைக்கு, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். சமூகத்துக்கு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கையர் முன்னேற்றத்துக்காக, 22 ஆண்டுகளாக, தன் கிராமியம் மற்றும் நாடகக் கலை வழியாக, வேலுார் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யா, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அவரது சேவையை பாராட்டி, 2023ம் ஆண்டுக்கான, சிறந்த திருநங்கை விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை, தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
ENGLISH
Every year on Transgender Day, April 15, the government presents an award to honor them. The awardee will receive a check of Rs 1 lakh and a certificate of appreciation. Apart from being a role model for the society, Aishwarya, a transgender woman from Veloor district, has been creating awareness for the progress of transgender people for 22 years through her acting and theater.
In recognition of her service, she was presented with the Best Transgender Award for the year 2023, a check of 1 lakh rupees and a certificate of appreciation yesterday at the secretariat, Chief Minister Stalin presented
0 Comments