Recent Post

6/recent/ticker-posts

மத்திய அரசுப் பணிகளில் சேர 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை - பிரதமர் மோடி தொடங்கிவைத்தார் / Prime Minister Modi launched the appointment order for 71 thousand people to join central government jobs

  • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு 'ரோஜ்கார் மேளா' திட்டத்தின் கீழ் மத்திய அரசுப் பணி வழங்கப்படும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.
  • இந்த திட்டத்தின்படி, மத்திய அரசின் துறைகளுக்கு நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கி வருகிறார். அந்த வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 71,506 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியை காணொலி வாயிலாக பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
  • நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை நேரில் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் வீடியோ உரை ஒளிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் பேசியதாவது:
  • வைசாகி புனித நாளில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு வேலை வழங்கும் நடைமுறை வேகமாக நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ருக்கு ஆசிரியர் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel