Recent Post

6/recent/ticker-posts

மருத்துவ சுற்றுலா மாநாடு / FIRST MEDICAL TOURISM CONFERENCE

TAMIL

  • தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், முதல்முறையாக மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக `தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாடு' சென்னைகிண்டியில் உள்ள ஐடிசி ஹோட்டலில் 2 நாட்கள் நடைபெறுகிறது.
  • இந்த மாநாட்டை நேற்று தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார்.
  • முன்னதாக, பல்வேறு மருத்துவமனைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்துவைத்துப் பார்வையிட்டார்.
  • 2023-24-ம் ஆண்டுக்கான சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கையில், 'தமிழ்நாட்டில் உள்ள பல்நோக்கு மற்றும் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள், தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா வளர்வதற்கு ஏதுவாக உள்ளன. 
  • எனவே, மருத்துவத் துறை தொழில்முனைவோருடன் இணைந்து, சென்னையில் சர்வதேச மருத்துவச் சுற்றுலா மாநாடு நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த 2 நாள் மருத்துவச் சுற்றுலா மாநாடு நடைபெறுகிறது.
  • இதில், வங்கதேசம், நேபாளம், சவுதி அரேபியா, ஓமன், மியான்மர், இலங்கை, மொரீசியஸ், மாலத்தீவுகள், வியட்நாம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த, 75-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
  • அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள 120 தனியார் மருத்துவமனைகளிலிருந்து பிரபல மருத்துவர்கள், அயல்நாட்டு தூதரக அதிகாரிகள், பயண ஏற்பாட்டாளர்கள், ஓட்டல் நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனப் பிரதிநிதிகள், சித்தா,யோகா, ஆயுஷ் மருத்துவர்கள், ஆரோக்கிய சுற்றுலா மருத்துவமனைகளின் மருத்துவர்கள் உள்ளிட்ட 350 பேர் பங்கேற்றுள்ளனர். இதில், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ENGLISH

  • Tamil Nadu Medical Tourism Conference is being held for 2 days at ITC Hotel in Chennai for the promotion of medical and health tourism for the first time under the auspices of Tamil Nadu Government Department of Tourism, Medical and Public Welfare Department.
  • Inaugurating the conference yesterday, Chief Minister M. K. Stalin also released a book on hospitals accredited by the National Hospitals and Medical Services Accreditation Board. Earlier, he inaugurated and visited the halls set up on behalf of various hospitals.
  • In the tourism department grant request for the year 2023-24, 'Multi-purpose and specialized multi-purpose hospitals in Tamil Nadu are conducive to the development of medical tourism in Tamil Nadu. 
  • Therefore, it was announced that an international medical tourism conference will be held in Chennai in collaboration with medical industry entrepreneurs. Accordingly, this 2-day medical tourism conference is held.
  • More than 75 delegates from 21 countries including Bangladesh, Nepal, Saudi Arabia, Oman, Myanmar, Sri Lanka, Mauritius, Maldives, Vietnam and African countries participated in this.
  • Similarly, 350 people from 120 private hospitals in Tamil Nadu including famous doctors, foreign embassies, tour operators, hotel management, insurance company representatives, Siddha, Yoga, Ayush doctors, health tourism hospitals have participated. In this, programs including discussion are held.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel