'பெட்டிங்' எனப்படும் பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக, சுய ஒழுங்குமுறை அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
இது, ஆன்லைன் விளையாட்டில் தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கியதாக இருக்கும். எத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளை அனுமதிக்கலாம்;
எவற்றை அனுமதிக்கக் கூடாது என்பது தொடர்பாக, இந்த அமைப்புகள் முடிவெடுக்கும்.ஆன்லைன் விளையாட்டைப் பொறுத்தவரை, பந்தயத்துடன் கூடியதா, இல்லையா என்பது தான் முக்கியம்.
பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டாக இருப்பின், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்பதை இந்த சுய ஒழுங்குமுறை அமைப்புகள் கூறிவிடும்.
0 Comments