Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவில் அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை வெளியிட்டார் பிரதமர் மோடி / Prime Minister Modi announced the increased number of tigers in India

  • பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச பெரிய பூனைகள் கூட்டணியை (ஐபிசிஏ) தொடங்கி வைத்து, புலிகளின் 50 ஆண்டு நிறைவையொட்டி நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளார்.
  • முதுமலை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி மீண்டும் மைசூரு சென்றார். அங்கு பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
  • நாட்டில் உள்ள புலிகளை பாதுகாக்க புலிகள் திட்டம் (Project Tiger) என்ற பெயரில் தொடக்கப்பட்ட திட்டம் 50-ம் ஆண்டை எட்டியுள்ள நிலையில் நாட்டில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவரத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். 
  • அதன்படி 2006ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் ஆயிரத்து 411 புலிகள் இருந்த நிலையில், 2010ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 1,706 ஆக அதிகரித்தது. 2014ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 226ஆக அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை, 2018ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 967 ஆக உயர்ந்தது.
  • ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வந்த புலிகளின் எண்ணிக்கை, 2022ம் ஆண்டில் 3 ஆயிரத்து 167 ஆக அதிகரித்தது கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. 
  • 2014ம் ஆண்டு முதல் 2022 வரையிலான 8 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 941 ஆகவும், 2018 முதல் 2022 வரையிலான 4 ஆண்டுகளில் 200 ஆகவும் உயர்ந்துள்ளது.
  • நாட்டில் உள்ள புலிகளை பாதுகாக்க 1973-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு 'புலிகள் திட்டத்தை' (Project Tiger) தொடங்கியது. 
  • அப்போது முதல் புலிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையின் பலனாக இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel