Recent Post

6/recent/ticker-posts

TNPSC JAILOR NOTIFICATIONS 2023: டிகிரி படித்திருந்தால் போதும் சிறைத்துறையில் வேலைவாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

TNPSC JAILOR NOTIFICATIONS 2023
  • TNPSC JAILOR NOTIFICATIONS 2023: தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்த துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் எண்ணிக்கை
  • உதவி சிறை அலுவலர் - ஆண்கள்(54), பெண்கள் (5)
கல்வித் தகுதி
  • பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர், 01.07.2023 அன்று 18 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு இல்லை.
சம்பளம்
  • ரூ. 35,400 முதல் 1,30,400 வரை சம்பளம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது (Level-11)
தேர்வு முறை
  • எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், பணியிட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு முறை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான பாடத்திட்டம்
  • எழுத்தத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் I-ல் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள், இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் கூடிய மாநில நிர்வாகம், சமூக பொருளாதார பிரச்னைகள், தேசிய அளவிலான நடப்பு நிகழ்வுகள், மாநில அளவிலான நடப்பு நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.
  • இரண்டாம் தாளில், தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? 
  • விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel